பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த பல்லடம் மின்வாரியம் அறிவுறுத்தல்

Tirupur News- பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பல்லடம் மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.;

Update: 2023-12-07 15:08 GMT

Tirupur News- மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தல் (மாதிரி படம்) 

Tirupur News,Tirupur News Today- பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பல்லடம் மின்சார வாரிய பல்லடம் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்லடம் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் ஜவஹா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத இடத்தில் மின்சாரத்தை தவிா்த்து, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். நாம் சேமிக்கும் மின்சாரம் நமக்கு மட்டுமில்லாமல் நமது சந்ததி மற்றும் நம் நாட்டுக்கு பயன்படும். மின்சாரத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தை சேமித்தால் 2 யூனிட் உற்பத்தி மிச்சமாகும். நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம். மின் விரையத்தை தவிா்த்து மின் தேவையைக் குறைக்க வேண்டும். மின்சாரத்தை சிக்னம் செய்தால் இயற்கை வளங்களைக் காக்க முடியும். திறன்மிகு உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேவையான நேரத்தில் மட்டுமே மின்விளக்குகள், மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டும். ஊழியர்கள், பணியாட்கள் அலுவலகத்தில் இல்லாத பட்சத்தில் மின்விளக்குகள், மின்விசிறிகளை அணைத்துவிட வேண்டும். தேவைப்படும் நேரத்தில் மட்டுமே  மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும். மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க செய்யும் கருவிகளை, பொருட்களை தேவைப்படும்  நேரத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் அவற்றின் மின் இணைப்பு தொடர்பை துண்டித்து விட வேண்டும்.

ஏர்கண்டிஷனர், பிரிட்ஜ், செல்போன் சார்ஜர், லைட் சார்ஜர் போன்றவற்றை தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின், மின்தொடர்பை கட்டாயம் துண்டிக்க வேண்டும். அப்படியே ஆன் செய்து விட்டு விடக்கூடாது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, உங்களது மின்கட்டணத்தையும் வெகுவாக குறைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதும், மின்சிக்கனம் பற்றிய பொதுவான அறிவுரைகளாக உள்ளது.

Tags:    

Similar News