வங்கி பணியாளருக்கு கொரோனா...

கொரோனா.;

Update: 2021-05-09 11:39 GMT

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரத்தில் கோவை–திருச்சி ரோட்டில் கனரா வங்கி செயல்படுகிறது.

இந்த வங்கியில் பணியாற்றும் 40 வயது பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக வங்கிக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

செம்மிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வங்கியின் உள் பகுதி, வெளிப்பகுதியில் கிருமி நாசினி மருந்து, பிளீச்சிங் பவகுடர் தெளித்தனர்.


Tags:    

Similar News