பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருநாள் உற்பத்தி நிறுத்தம்
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜி.எஸ்.டி., வரி உயர்வு, கொரோனா ஊரடங்கு, பஞ்சு நுால் விலை உயர்வு, விசைத்தறி ஒப்பந்த கூலி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை, ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த காலத்தில் சந்தித்தனர். ஜவுளி உற்பத்தி தொழில் பாதித்துள்ள சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால், தொழிலை நடத்தவே இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவையில் வரும், 16 அன்று மின் கட்டண உயர்வு தொடர்பான குறைகேற்பு கூட்டம் நடக்க உள்ளது. அன்று ஒருநாள் ஒட்டுமொத்த உற்பத்தியும் நிறுத்திவிட்டு, தொழில்துறையினர் அனைவரும் அக்கூட்டத்தில் பங்கேற்க. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.