பல்லடம், திருப்பூர் ஊரகப்பகுதிக்கு ரூ.99 கோடியில் புதிய குடிநீர் திட்டம்

பல்லடம் மற்றும் திருப்பூர் ஊரக பகுதிகளுக்கு, புதிய குடிநீர் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-01-22 11:15 GMT

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் திருப்பூர் ஊரக பகுதிகளை உள்ளடக்கிய, 155 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை ஆதாரமாக கொண்டு, 99 கோடி ரூபாய் செலவில், கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை, முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், 1.92 லட்சம் மக்கள் பயன் பெறுவர் எனவும், ஆண்டுக்கு. 8.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும் எனவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News