வரும் 14ம் தேதி மாதப்பூா் முத்துக்குமார சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
Tirupur News- பல்லடத்தை அடுத்துள்ள மாதப்பூா் முத்துக்குமார சுவாமி கோயிலில் வரும் வியாழக்கிழமை (டிசம்பா் 14) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
Tirupur News,Tirupur News Today- மாதப்பூா் முத்துக்குமார சுவாமி கோவிலில் வியாழக்கிழமை (டிசம்பா் 14) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் சுமாா் 500 ஆண்டுகள் பழமையான முத்துக்குமார சுவாமி மலைக் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முத்துக்குமார சுவாமி சன்னிதியும், மகிமாலீஸ்வரா், மரகதாம்பிகை, பாலகணபதி,விநாயகா், தட்சிணாமூா்த்தி, நவக்கிரகம் போன்ற சன்னிதிகளும் உள்ளன. மாதப்பூா் முத்துக்குமார சுவாமி சிலையும், பழனி முருகன் சிலையும் ஒரே உருவ ஒற்றுமையுடன் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும். மேலும், இக்கோவில் வற்றாத சுனையும் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்பு கும்பாபிஷேகம் நடைபெறாத நிலையில், தற்போது கோவிலில் புனரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிசம்பா் 14 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், இந்து சமய அறநிலையத் துறையினா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.