பல்லடத்தில் சுதந்திரதின அமுத பெருவிழா மாரத்தான் போட்டி

பல்லடத்தில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-30 14:30 GMT

பல்லடத்தில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மாவட்ட கல்விதுறையின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக,  மாவட்ட கல்வித்துறையின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தலைமையில், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில்,  பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த கிரிநாத் முதலிடம், அதே பள்ளியைச் சேர்ந்த நேருதாசன் இரண்டாமிடம், அருண்குமார் மூன்றாமிடம் பிடித்தனர். இந்நிகழ்ச்சியில், பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன், ஆசிரிய-  ஆசிரியைகள், நகர தி.மு.க பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் மற்றும் தி.மு.க  நிர்வாகிகள், மாணவ- மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News