குண்டடம்; சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
குண்டடம் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.;
குண்டடம் பகுதியில், சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
திருப்பூர் குண்டடம் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சின்னவெங்காய சாகுபடி திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடமபாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது;
குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.
மேலும் இந்த பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய ஒரு ஏக்கருக்கு விதைகள், கூலி, களைஎடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை வரை செலவாகிறது சின்னவெங்காயத்தை 100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள சின்ன வெங்காய பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றல் அதிக லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சின்ன வெங்காயத்தின் விலை, கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த நிலையில், தற்போது பத்து தினங்களாக விலை குறைந்துள்ளது. வெங்காயத்தின் வரத்து, பல பகுதிகளில் அதிகமாக இருந்ததால், சின்ன வெங்காயம் விலை குறைந்து வருகிறது. தற்போது, வெங்காயம் சாகுபடி அதிகரித்து வருவதால், இனி வரும் நாட்களில் சின்ன வெங்காயம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது.