அரசுப்பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
பல்லடம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில், 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் நீலவேணி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஆய்வாளர் சுமதி பேசியதாவது:
'போக்சோ' சட்டம் என்பது குழந்தைகளை பாதுகாக்க, 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து பெண்களும் சிறுமியராக கருதப்படுவர். மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து, 1098, 100, அல்லது தமிழக அரசு அறிவித்துள்ள, 14417 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கூறலாம்.
புகார்கள் ரகசியம் காக்கப்படும். இதற்காக, போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. புத்தகம் பார்க்க மட்டுமே தலைகுனிய வேண்டும். வாழ்க்கையில் தலைகுனிய கூடாது. அறிவுசார்ந்த விஷயங்களுக்காக மட்டும் மொபைல் போன் பயன்படுத்துங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.