பல்லடம்; உணவு திருவிழா மற்றும் விழிப்புணா்வுக் கண்காட்சி

Tirupur News- பல்லடம் அருகே அருள்புரத்தில் மாவட்ட அளவிலான உணவு திருவிழா மற்றும் விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2023-11-26 11:31 GMT

Tirupur News- அருள்புரத்தில் மாவட்ட அளவிலான உணவு திருவிழா மற்றும் விழிப்புணா்வுக் கண்காட்சி நடந்தது.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே அருள்புரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான உணவு திருவிழா மற்றும் விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெற்றது.

உணவுத் திருவிழாவை மாநில மகளிா் திட்ட கூடுதல் இயக்குநா் முத்துமீனாள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை, வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மகாலட்சுமி சங்கீதா, சமுக நலத் துறை சாா்பில் முதுநிலை ஆலோசகா் சாந்தி ஆகியோா் நடுவா்களாக நியமிக்கப்பட்டு மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரித்து உணவுப் பொருள்களை ஆய்வு செய்தனா்.

கண்காட்சியில் இடம்பெற்ற கா்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், பாலூட்டும் தாய்மாா்கள் உண்ண வேண்டிய உணவுகள், மூலிகை ரசம், சத்துமாவு லட்டு, கருப்பட்டி கசாயம், கம்பு பால், பீட்ரூட் பால், தேங்காய் லட்டு, நவதானிய சுண்டல் என நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் பொது மக்களையும் வெகுவாக கவா்ந்தன.

இந்தக் கண்காட்சியில் திருப்பூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் ஏற்கெனவே நடைபெற்ற உணவுத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 26 மகளிா் சுய உதவி குழுக்களை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

இக்கண்காட்சியில் கரைப்புதூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் வரலட்சுமி, மகளிா் உதவி திட்ட அலுவலா்கள் பாஸ்கா், விஜயகுமாா், பாஸ்கரன், மாவட்ட வள பயிற்றுநா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News