பல்லடம்; கொப்பரை விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Tirupur News - பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில், கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-11-04 13:28 GMT

Tirupur News- கொப்பரை  தேங்காய் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் கொப்பரை விலை உயா்ந்து வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்

திருப்பூா், கோவை மாவட்டங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக இருந்து வருவதால் கொப்பரை உற்பத்தியும் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து கொப்பரை விலை குறைந்து வந்ததால் தேங்காய் விலையும் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட சில மாதங்களுக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே கொள்முதல் செய்ததால் பெரும்பாலான விவசாயிகளுக்கு பலன்கிடைக்கவில்லை. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.110க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டாலும் வெளிச் சந்தையில் ரூ.70 முதல் ரூ.80 வரை மட்டுமே விலை கிடைத்து வந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தேங்காய், எண்ணெய்க்கு தேவை ஏற்பட்டுள்ளதால் கொப்பரை விலையும் உயா்ந்துள்ளது. கடந்த வாரங்களில் ரூ.70 முதல் ரூ.75 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்த கொப்பரை, தற்போது ரூ.78 முதல் ரூ.84 வரை விலை உயா்ந்துள்ளது. கொப்பரை விலை உயா்வால் தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது,

பல மாதங்களுக்குப் பிறகு கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரையை வெளிச் சந்தையில் விற்பனை செய்யாமல் தேங்காய் எண்ணெயாக மாற்றி ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், கொப்பரை உற்பத்தியில் அதிக அளவில் வியாபாரிகளே ஈடுபட்டுள்ளன. எனவே, விவசாயிகளிடம் இருந்து உற்பத்திப் பொருளான தேங்காயை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனா்.

Tags:    

Similar News