பருத்திக்கு நிலையான விலை : பல்லடம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

பருத்திக்கு, நிலையான விலை கிடைக்க, உடுமலை, பல்லடம் பகுதிவிவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-12-30 10:45 GMT

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., மண்டல பாசன பரப்பு விரிவாக்கம், பல்வேறு புதிய வகை நோய்த்தாக்குதல், நிலையான விலை இல்லாதது, தொழிலாளர் பற்றாக்குறை உட்பட காரணங்களால், பருத்தி சாகுபடி பரப்பு நுாறு ஏக்கர் வரை குறைந்தது.

கடந்த, 2009ல், இருந்து, மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ், பருத்தி சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவ்வகையில், தற்போது, பி.ஏ.பி., இரண்டாம் மற்றும் நான்காம் மண்டல பாசன காலத்திலும், மானாவாரியாகவும் பரவலாக பருத்தி மீண்டும் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறுகையில், அதிக மழை காரணமாக, நடப்பு சீசனில், மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, நீண்ட இழை பருத்தி ரகத்தில், ஏக்கருக்கு, 15 குவிண்டால், வரை மகசூல் கிடைக்கும்.தற்போது, தரத்தின் அடிப்படையில், கிலோவுக்கு, 7,500 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. மகசூல் பாதியாக குறைந்துள்ளதால், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News