பல்லடத்தில் 20 ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றம்
ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கரடிவாவியில், 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிவாவி புதூரில், சின்னக்குட்டை உள்ளது. குட்டையை ஆக்கிரமித்து ஒரு ஏக்கரில் குடியிருப்புகள், குடோன்கள் கட்டப்பட்டுள்ளன. நீராதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதனடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவை பின்பற்றி, 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது. குட்டையை சுற்றி, 3,548 சதுர மீட்டர் பரப்பளவில், 41 குடியிருப்புகள் குடோன்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கடந்த ஜூலையில் நோட்டீஸ் வினியோகிக்கப் பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுவின்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியுள்ளது என, வருவாய்த்துறையினர் கூறினர்.