பல்லடத்தில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப் பொருளின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, பல்லடம் கல்லூரியில் நடை பெற்றது.
பல்லடம் அருகே, ஏ.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசுகையில் மாணவ சமுதாயம் போதை பொருளினால் எவ்வாறு சீரழிந்து வருகிறது என விளக்கி பேசினார்.
அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில் போதை பொருளின் தீமை குறித்தும் அதிலிருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கி கல்வியில் கவனத்தை செலுத்தி தன்னம்பிக் கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் ஆனந்தமுருகன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.