பல்லடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் கள ஆய்வு
பல்லடம் மற்றும் பொங்கலுார் பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.;
பல்லடத்தில் பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் மற்றும் பொங்கலுார் பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பேரிடர் கால பதட்டமான பகுதிகள் என்று கூறப்படும் பட்டியலில் உள்ள பொங்கலுார், வடமலைபாளையம் மற்றும் பல்லடம், அண்ணா நகர் குட்டையிலும் மீட்பு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தாசில்தார் நந்தகோபால் மற்றும் நகராட்சி கமிஷனர் விநாயகம், பி.டி.ஓ., வில்சன், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'பேரிடர் காலங்களில், திட்டமிட்டு செயல்பட வேண்டும்.பாதிப்புகள் ஏற்படும் என்று கருதும் பகுதிகளை முன்கூட்டியே பட்டியலிட்டு, போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,' என, மீட்பு குழுவினர் அறிவுறுத்தினர். பேரிடர் மீட்டு குழுவின் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சவுகான் தலைமையிலான குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டனர்.