தாராபுரத்தில் கொரோனா தாக்கம் கிடுகிடுவென அதிகரிப்பு

தாராபுரத்தில் கடந்த இரண்டு நாட்களில் கொரோன தொற்று இருமடங்காக அதிகரித்துள்ளது.;

Update: 2022-01-10 13:30 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அலங்கியம், பொன்னாபுரம் உள்ளிட்ட பகுதியில், 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில், 9 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களையும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்துடன் ஒப்பிட்டால், தாராபுரம் பகுதியில் தொற்று பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. 

Tags:    

Similar News