பல்லடம்; மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Tirupur News-100 நாள் வேலை திட்டத்தை சிதைப்பதாக மத்திய அரசை கண்டித்து, பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-11-16 16:34 GMT

Tirupur News- மத்திய அரசை கண்டித்து, பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today-100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசை கண்டித்து, பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்லடம் இந்தியன் வங்கி முன்பு 100 நாள் வேலை திட்டத்தை சிதைப்பதாக மத்திய அரசை கண்டித்து பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் கணேசன், மங்கலம் வட்டார தலைவர் சபாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் மத்திய பா.ஜ.க. அரசு இந்த திட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக மத்திய பா.ஜ.க அரசு சம்பளம் வழங்கவில்லை. இதனால் அதில் வேலை செய்த ஏழை மக்கள் சொல்லனா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அனுப்பவில்லை.

எனவே 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைமை உத்தரவின் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சக்திவேல், ஜேம்ஸ், பாலு, லோகேஷ், காளியப்பன் தமிழ்ச்செல்வி, மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News