பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்
Tirupur News- பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பில் நடந்து வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு செய்தார்.;
Tirupur News,Tirupur News Today- பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்படி பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி நேரு நகர் ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர் தேக்கதொட்டியையும், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 கூடுதல் வகுப்பறை கட்டடத்தினையும், செம்மிபாளையம் பகுதியில்ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடத்தையும், ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
இதேபோல பல்லடம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியில் ரூ.52.53 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப்பணிகளையும்,இதேபோல கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் கான்கிரீட் சாலை பணிகள் எனமொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், கரடிவாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கரடிவாவி ஊராட்சியில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேசிய திட்ட விளக்க பிரச்சார ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஷிலா புண்ணியமூர்த்தி, கல்விக் குழு தலைவர் புண்ணியமூர்த்தி , மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன்,மற்றும் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், உதவிப் பொறியாளர்கள் குருபிரசாந்த், செந்தில் வடிவேல்,மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.