நகர உள்ளாட்சி தேர்தல்: பல்லடம் கல்லம்பாளையத்தில் பா.ஜ.க ஆலோசனை கூட்டம்
பல்லடம் நகராட்சி தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர்.
பல்லடம் நகராட்சி தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர்.
நகர உள்ளாட்சி தேர்தல் தொடர்பான, பா.ஜ., ஆலோசனை கூட்டம், பல்லடம் கல்லம்பாளையத்தில் நடந்தது. நகர பொது செயலாளர் வேலுமணி, தலைமை வகித்தார். நகர தலைவர் வடிவேல், மாவட்ட செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் மங்கலம் சாலையில் அடிக்கடி, விபத்து நடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை முறையாக துார் வார, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு திட்டம் மூலம், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, தரமானதாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், நகர விவசாய அணி பொதுச் செயலாளர் வேலுசாமி, நிர்வாகிகள் ரமேஷ், குமார், தங்கவேல், சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.