செல்போன் டவர் அமைப்பதாக மோசடி; வாலிபர் கைது
Mobile Tower Installation Rent -பல்லடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதாக ஏமாற்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபரை, திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
Mobile Tower Installation Rent - பல்லடம், சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் கதிர்வேலு. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த பிப்ரவரி 24 ம் தேதி மெசேஜ் வந்துள்ளது. அதில், உங்களுடைய காலி நிலத்தில் 5ஜி செல்போன் கோபுரம் அமைக்கப் போவதாகவும், அதற்கு வாடகை பணம் தருவதாகவும் கூறப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது முதலில் கொஞ்சம் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கதிர்வேலு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை அந்த நபரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மீண்டும் அந்த நபர் பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் கதிர்வேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் கதிர்வேலு புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச சேர்ந்த செல்வமணி (வயது 24) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த இரண்டு செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் ரூ.37 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2