பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 320 போ் லைசென்ஸ் ரத்து; போலீசார் நடவடிக்கை

Tirupur News- பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,349 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, 320 பேர் லைசென்ஸ் ரத்து செய்தனர்.;

Update: 2023-10-06 01:18 GMT

Tirupur News- பல்லடத்தில், 320 பேர் லைசென்ஸ் ரத்து (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,349 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், 320 பேரின் ஒட்டுநா் உரிமங்களை ரத்து செய்துள்ளனா்.

திருப்பூர் மாவட்டத்தில், தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். குடியிருப்புகளும் அதிகளவில் காணப்படுகின்றன. வாகனங்களின் பெருக்கமும் மிக மிக அதிகமாக உள்ளன. முக்கிய நகரங்களான திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட நகரங்களில், வாகனங்களின் போக்குவரத்து மிக அதிகமாக காணப்படுகின்றன. இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. 

கட்டுப்பாடு இல்லாத அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. அதனால், அடிக்கடி வாகன சோதனை நடத்தப்பட்டு விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமீறுவோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாமிநாதன் உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீசார் பல்லடத்தில் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியாமல் சென்ற 244 போ், குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 76 போ் என பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 1,349 போ் மீது கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவா்களிடமிருந்து ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 320 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனா்.

Tags:    

Similar News