மாசு விழிப்புணர்வு: பல்லடத்தில் துவங்கியது சைக்கிள் இயக்கம்
பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு, மற்றும் அறநெறி அறக்கட்டளை சார்பில், சைக்கிள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.;
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. பேரணிக்கு, கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் விபத்தில்லா சமுதாயம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், சைக்கிள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளதாக, அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாசு குறைக்க, சைக்கிள் பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, பொருளாதார ரீதியாகவும் சைக்கிள் பயனுள்ளது. சைக்கிளில் செல்லும், 45 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருவதில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் இருந்து தப்பிக்கவும், இது உதவும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.