பல்லடத்தில் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி; பொதுமக்கள் ஆர்வம்

Tirupur News- பல்லடத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-10-09 02:32 GMT

Tirupur News- பல்லடத்தில் நடந்த மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு, பல்லடம் போலீஸ் டிஎஸ்பி  சௌமியா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்துக் கொண்டனர்.

அக்டோபா் 5 முதல் 12 -ம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டதின் மூலம், அரசின் நலத்திட்ட பணிகள், அரசு பணிகள், மக்கள் குறைகள் மீதான அரசு நிர்வாக அதிகாரிகளின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு விவரங்களை கேட்டு, பொதுமக்கள் அறிந்துக்கொள்ள முடியும். இதுகுறித்து விழிப்புணர்வுக்காக, மக்கள் மத்தியில் மராத்தான் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இதையொட்டி பல்லடத்தில், காவல் துறை சாா்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதனை, பல்லடம் போலீஸ் டிஎஸ்பி சௌமியா தொடங்கிவைத்தாா். இதில் பல்லடம் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர், பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்துக்கொண்டு ஓடினர். 

பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் தொடங்கிய மாரத்தான் வடுகபாளையம் வழியாக 5 கிலோ மீட்டா் தொலைவுக்குச் சென்று கொசவம்பாளையம் பிரிவில் நிறைவடைந்தது. இதில், பல்லடத்தைச் சோ்ந்த சத்யா என்ற மாணவா் முதலிடம் பிடித்தாா். போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், அனைத்து மகளிா் போலீஸ் இன்ஸ்பெக்டர் பா்வீன் பானு, குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், அவிநாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News