பல்லடம்; கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய எம்எல்ஏவிடம் கோரிக்கை
Tirupur News- கரைப்புதூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பல்லடம் எம்எல்ஏ., ஆனந்தனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் பள்ளித் தலைமை ஆசிரியா், பொதுமக்கள் மனு கொடுத்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி 2017-ம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் 175 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா்.
பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள் இல்லாததால் பொன்நகா் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நபாா்டு வங்கி மூலம் ரூ.85 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டு வருகின்றன. இது போதுமானது அல்ல என்பதால், மேலும் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், இந்த இடத்துக்குச் சுற்றுச் சுவா், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன் கரைப்புதூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் உள்பட பலா் இருந்தனா்.