10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

Update: 2022-01-09 04:00 GMT

திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,'ஏழு ஆண்டுகளாக, விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி உயர்வை வழங்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடிப்பு செய்கின்றனர். எனவே, வேறு வழியின்றி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை' என்றனர்.

போராட்டத்தின் காரணமாக, விசைத்தறி மட்டுமன்றி, சைசிங், நுாற்பாலைகள், ஓ.இ., மில்கள் ஆகியவற்றில் பணிபுரியும், 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்புடன், வருவாய் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என  அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News