நெடுஞ்சாலைத் துறையை இப்படியா கலாய்ப்பது ?

பல்லடம் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறையை கலாய்த்து நூதன பேனர் வைத்துள்ளனர்.;

Update: 2022-02-26 02:45 GMT

பல்லடம் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறையை கலாய்த்து நூதன பேனர் வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் இருந்து சங்கோதிபாளையம் வரையிலான இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆரம்பகட்ட பணிகள் துவங்கி அதன் பிறகு கிடப்பில் போடப்பட்டது. 'சாலை அமைக்கும் பணியை வெற்றிகரமாக ஓராண்டாக ஒரு மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலைத் துறையின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் என சுட்டிக்காட்டி பேனர் வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில்,'ரோடு பணி துவங்கி ஓராண்டாகியும் பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், விசைத்தறி கூடங்கள், இலங்கை தமிழர் குடியிருப்புகள் உள்ளிட்டவை இப்பகுதியில் உள்ளதால், இவ்வழியாக எண்ணற்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் பாதியில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்' என்றனர்.

Tags:    

Similar News