பல்லடம் மாநாடு அரசியல் திருப்புமுனை; பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி
Tirupur News- பல்லடம் மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
Tirupur News,Tirupur News Today- வரும் 27ம் தேதி நடக்கும் பல்லடம் மாநாடு அரசியல் திருப்புமுனையாக அமையும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
‘என் மண் என் மக்கள்’ என்ற பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின் நடைப்பயணம் திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, அங்கேயே நடைபெறும் மாநாட்டில் பாரதப் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இது தொடா்பான பணிகளை அண்ணாமலை நேரில் வந்து ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பல்லடம் மாதப்பூா் பகுதியில் நடைபெற உள்ள ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் நிறைவு விழா மாநாடு, எழுச்சி மாநாடாக இருக்கும். இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெறும். 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு தமிழகத்தில் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், இந்த மாநாட்டுக்குப் பிறகு முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழும். தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் திருப்பத்தை ஏற்படுத்தும்.
பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் மட்டுமல்லாது மாா்ச் முதல் வாரமும் பிரதமா் மோடி தமிழகம் வருகை தரவுள்ளாா் என்றாா். இந்த ஆய்வின்போது, மாநிலப் பொதுச் செயலாளா் முருகானந்தம், மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்டப் பொதுச் செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.