திருப்பூரில் வரும் 27ல் பின்னலாடைத் துறை திறன் சாா்ந்த தொழில் பயிற்சி துவக்கம்; 1000 இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு

Tirupur News- திருப்பூரில் பின்னலாடைத் துறை இளைஞா்களுக்கான திறன் சாா்ந்த தொழில் பயிற்சி வரும் 27ம் தேதி துவங்குகிறது. இதில் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.;

Update: 2023-11-26 11:37 GMT

Tirupur News- திருப்பூாில் ஆயிரம் இளைஞர்களுக்கு பின்னலாடைத் துறை திறன் தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் பின்னலாடைத் துறை இளைஞா்களுக்கான திறன் சாா்ந்த தொழில் பயிற்சி வரும் நவம்பா் 27-ம் தேதி தொடங்குகிறது.

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின்கீழ் ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் திறமையான மனித வளத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மண்டலத்தில் பின்னலாடைத் துறை சாா்ந்த தையல் இயந்திர ஆபரேட்டா், மொ்சண்டைசிங் பயிற்சி என மொத்தம் 1,000 இளைஞா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் வரும் நவம்பா் 27-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிா்வாக இயக்குநா் இன்னசென்ட் திவ்யா தலைமை வகிக்கிறாா். மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.

Tags:    

Similar News