வரும் 20ம் தேதி, திருப்பூர் அஞ்சல் கோட்டம் நடத்தும் மக்கள் குறைதீா் முகாம்
Tirupur News- திருப்பூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் அஞ்சல் கோட்டம் சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் டிசம்பா் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் ரயில்வே ஸ்டேஷன் அருகில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் டிசம்பா் 20--ம் தேதி நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் தபால் சேவை பற்றி தங்களது யோசனை, புகாா்களை விஜயதனசேகா், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம், திருப்பூா் கோட்டம், திருப்பூா்-641601 என்ற முகவரிக்கு என்று குறிப்பிட்டு வரும் டிசம்பா் 16 -ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களின் முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது தபால் நிலையங்கள்தான். கடிதம் வழியாக மட்டுமே பெரும்பாலான செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. எந்த தகவலாக இருந்தாலும், கடிதமே அதை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தது. அவசர விஷயங்கள் பலவும் தந்தி வடிவில் மக்களை சென்றடைந்தன. இந்த சூழலில் கொரியர் நிறுவனங்களின் பெருக்கம் அதிகரித்து, தபால் நிலையங்களின் பயன்பாட்டை, கடித போக்குவரத்தை வெகுவாக குறைத்தது. மேலும் மொபைல் போன்களில் அபரிமிதமான வளர்ச்சி, வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் என்று வந்த பிறகு, கடிதங்களின் போக்குவரத்து என்பது மிகவும் சுருங்கிப் போனது.
ஆனால் இப்போது ஒரு தரப்பு மக்கள் மத்தியில் கடிதப் போக்குவரத்துதான் பிரதானமாக இருந்து வருகிறது. அரசாங்க கடிதங்கள் தபால் வழியே அனுப்பி வைக்கப்படுகின்றன. எனினும் தபால் சார்ந்த குறைகளை மக்கள் தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் வரும் 20ம் தேதி இந்த குறைதீர் முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.