பல்லடம்; 4 பேர் கொலை வழக்கில் வரும் 15-ம் தேதி தீா்ப்பு
Tirupur News- பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் வரும் 15-ம் தேதி தீா்ப்பு வெளியாகிறது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஏப்ரல் 15- ம் தேதி தீா்ப்பு வெளியாகவுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ம் தேதி மது அருந்தியவா்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (47), மோகன்ராஜ் (49), ரத்தினம்மாள் (58), புஷ்பவதி (67) ஆகிய நான்கு போ் வெட்டிக் செய்யப்பட்டனா். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடா்பாக பல்லடம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம், அரியநாகரிபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (27), அவரது தந்தை ஐயப்பன் (52), மணப்பாறையைச் சோ்ந்த செல்லமுத்து (24), தேனியைச் சோ்ந்த விஷால் (எ) சோனை முத்தையா (20), செல்வம் (25) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்கள் 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பான விசாரணை திருப்பூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறு. இது தொடா்பாக 800 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 51 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் திங்கள்கிழமை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் மீதான தீா்ப்பு ஏப்ரல் 15 -ம் தேதி வெளியாகும் என்று இந்த வழக்கில் ஆஜரான திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வழக்குரைஞா் எஸ்.கனகசபாபதி தெரிவித்துள்ளாா்.