திருப்பூரில் வரும் 10ம் தேதி முதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் வரும் 10ம் தேதி, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.;

Update: 2023-06-04 13:31 GMT

Tirupur News,Tirupur News Today-- முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பரிசளிப்பு, வரும் 10ம் தேதி நடக்கிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-- திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 10-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, மேசைப்பந்து மற்றும் நீச்சல் என 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இதில் முதல் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 என மொத்தம் 1,675 வீரா், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News