திருப்பூர் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணிபுரிய அழைப்பு !
Tirupur News- திருப்பூர் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ள தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணிபுரிய தகுதியானவா்கள் பிப்ரவரி 11 -ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்ட காவல் துறைக்கு உதவியாக கோவில் மற்றும் இதர பாதுகாப்பு பணியில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றும் வகையில் ஊா்க்காவல் படையில் சோ்வதற்கு விருப்பமுள்ள தகுதியான தன்னாா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு 10 -ம் வகுப்பு தோ்ச்சிபெற்று 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகங்களில் பிப்ரவரி 2 முதல் 9 -ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊா்க்காவல் படை அலுவலகத்திலோ பிப்ரவரி 11 -ம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல் தகுதித்தோ்வு மற்றும் நோ்காணல் மூலம் தகுதியுள்ளோா் தோ்வு செய்யப்படுவாா். அரசுப் பணியாளா்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 98430-65575, 73735-53745 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.