மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்

Tirupur News- உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் போத்தம்பாளையம் பக்கிரி காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம் நடைபெற்றது.

Update: 2024-05-03 15:55 GMT

Tirupur News- மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today- உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் போத்தம்பாளையம் பக்கிரி காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கடந்த காலங்களில் போல் இல்லாமல் இந்த முறை இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நகரமும் வெயிலில் அனல் தாக்கத்தால் மிகவும் தகிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கிறது.

குறிப்பாக, இந்திய அளவில் அதிக வெப்பம் உள்ள  மாவட்டமாக ஈரோடு மாவட்டம் இந்த முறை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. அதன் அருகில் உள்ள  மாவட்டமான திருப்பூர் மாவட்டத்திலும் வெயிலும் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது. பனியன் தொழிலாளர் நிறைந்துள்ள திருப்பூரில், இது போன்ற வெயிலின் தாக்கத்தால் பலரும் பல விதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அம்மை நோய் தாக்கம், திருப்பூரில் பல்வேறு இடங்களில் மிக அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தை தணிக்கவும், பூமியின் சூட்டை குறைக்கவும் மழை பெய்தால் மட்டுமே மக்கள் தாக்குபிடிக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சில ஆன்மீக அமைப்புகள் சார்பில், மழை வேண்டி தொடர்ந்து வேள்விகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் இஸ்லாமிய அமைப்பு, தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி திருப்பூர் நொய்யல் வீதி பள்ளியில், சிறப்பு தொழுகை நடந்தது. இப்போது பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

சேவூா்-குட்டகம் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நவசண்டி ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 3 மணிக்கு மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பக்தா்கள் மழை வேண்டி சிறப்பு கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, பத்ரகாளியம்மன், சாமுண்டீஸ்வரி, பராசக்தியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கலச அபிஷேகம், திரவிய அபிஷேகம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து அனைவருக்கும் ஹோம ரட்ஷை, பிரசாதம் வழங்கப்பட்டன. சண்டிஹோமத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News