திருப்பூரில் வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், வரும் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் டிசம்பா் 9-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய மற்றும் தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூா் மாவட்ட நீதிமன்றங்களில் வரும் சனிக்கிழமை (டிசம்பா் 9) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8 அமா்வுகளும், அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரத்தில் தலா 2 அமா்வுகள், உடுமலையில் 4 அமா்வுகள் என மொத்தம் 20 அமா்வுகளாக இது நடைபெற உள்ளது.
இதில், நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்பநல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.