திருப்பூருக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை - ஏன் தெரியுமா?
அரக்கோணத்தில் இருந்து திருப்பூருக்கு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.;
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாவட்ட அளவில் சென்று, வெள்ளம் - மழைக்காலங்களில் மீட்புப்பணி மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கின்றனர். அவ்வகையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 13 பேர் கொண்ட குழு, திருப்பூருக்கு வந்துள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த குழுவினர், திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று, பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், வரும் 28 -ஆம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சிகள் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளை பார்வையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.