திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 12,384 போ் விண்ணப்பம்

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,384 பேர் விண்ணப்பித்துள்ளனர்.;

Update: 2023-11-29 08:24 GMT

Tirupur News- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் நடந்த வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 12,384 போ் விண்ணப்பித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த நவம்பா் 4, 5, 25, 26-ம் தேதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 12 ஆயிரத்து 384 பேரும், பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய 869 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

ஒரே தொகுதிக்குள் முகவரி திருத்தம் செய்யவும், மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்யவும், வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்கள் மற்றும் போட்டோ திருத்தம் செய்தல் ஆகிய பணிகளுக்காக 6 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த முறை  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் வாய்ப்பை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக, வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மீண்டும் இதே போன்ற ஒரு சிறப்பு முகாமை, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், கடந்த சில தினங்களாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சிலர், இந்த வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க முடியாமல் விடுபட்டுள்ளனர். எனவே, மீண்டும் ஒரு சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags:    

Similar News