திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம்; வரும் 24ல் நடக்கிறது
Tirupur News- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி, மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம், வரும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 24) நடக்க உள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர்கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடக்கிறது.
திருப்பூா் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளனா்.
கூட்டத்தில், முதலில் விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை சமா்ப்பிக்கவும், அதன் பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் தங்களது கோரிக்கைகளைத் தொகுத்து தெரிவிக்கலாம்.
மேலும், நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலா்கள், தோட்டக்கலை அலுவலா்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்படவுள்ளது.
ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.