நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உத்தரவு

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளாா்.;

Update: 2023-12-21 08:01 GMT

Tirupur News- அமராவதி அணை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் .கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருமூா்த்தி அணை, அமராவதி அணை, உப்பாறு அணை ஆகிய அணைகளுக்கு நீா் வரத்து, அணையின் நீா்மட்டம், நீா் வெளியேற்றம், அணையின் கொள்ளளவு ஆகியவற்றை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அணைகளில் இருந்து ஆறு மற்றும் கால்வாய்களில் உபரிநீா் வெளியேற்றும்போது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிப்பதுடன், பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.

பேரிடரின்போது பொது கட்டடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக, மாவட்ட பேரிடா் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் போதுமானதாகவும், தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். ஆறு, ஏரி, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீா்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளைப் பலப்படுத்த ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌமியா ஆனந்த், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், கோவை மண்டல தலைமைப் பொறியாளா் (நீா்வளத் துறை) சிவலிங்கம், ஆழியாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் காஞ்சிதுறை, திருமூா்த்தி கோட்டப் பொறியாளா் மகேந்திரன், அமராவதி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் கோபி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அமராவதி பிரதான வாய்க்காலில் உபரிநீா் திறப்பு 

அமராவதி அணையின் நீா்மட்டம் 88 அடியைத் தாண்டியதையடுத்து அணையில் இருந்து அமராவதி பிரதான வாய்க்காலில் உபரிநீா் நேற்று திறக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அணைக்கு நீா்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தொடா்ந்து அணைக்கு தண்ணீா் வரத்து உள்ளதால் அணையின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் 88 அடியைத் தாண்டியதும் அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 88 அடியைக் கடந்தது. இதையடுத்து, அமராவதி பிரதான வாய்க்காலில் உபரிநீா் திறக்கப்பட்டது. மேலும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 88.85 அடி நீா் உள்ளது. 4,035 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட அணையில் 3,942.77 மில்லியன் கனஅடி நீா் உள்ளது. மேலும், அணைக்கு 1,066 கனஅடி நீா்வரத்து உள்ளது.

Tags:    

Similar News