மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில், குடிநீா் இணைப்பு பழுதுகளை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.;

Update: 2023-10-28 11:51 GMT

Tirupur News- குடிநீர் விநியோகம் சீராக வழங்க அமைச்சர் அறிவுறுத்தல் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா் இணைப்பு பழுதுகளை உடனடியாக சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

குடிநீா்த் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு,  கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் திருப்பூா் மாநகராட்சி மற்றும் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்தூா் பேரூராட்சி, வள்ளியரச்சல் ஊராட்சி, வெள்ளக்கோவில் நகராட்சி, காங்கயம் ஊராட்சி ஒன்றியம், காங்கயம், தாராபுரம் சட்டப் பேரவை தொகுதிகள், உடுமலை ஊராட்சி ஒன்றியம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகாா்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், குடிநீா் இணைப்புகளில் பழுது ஏற்படும்போது உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், மறு சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும், என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊராக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாநகராட்சி துணை ஆணையா் சுல்தானா, வருவாய் கோட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News