மடத்துக்குளம் அருகே வெறிநாய் கடித்து 30 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
Rapid dog bite 30 people admitted மடத்துக்குளம் அருகே வெறி நாய் கடித்ததால் 30 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
Rapid dog bite 30 people admitted
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாலரப்பட்டி, நீலம்பூர், பெத்தநாயக்கனூர், கழுகரை, ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய் தொல்லை அதிகளவில் இருந்து வருவதாகவும் அதைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
Rapid dog bite 30 people admitted
வெறிநாய் கடியால் பாதிப்படைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரி.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, அப்பகுதி மக்களை துரத்தித் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண்கள் குழந்தைகள் என 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவல் கிராம மக்களிடையே பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது
Rapid dog bite 30 people admitted
இதுபோல் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது (கோப்பு படம்)
இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், “வெறிநாய்க்கடிக்கு தேவையான மருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்” என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்களை கடித்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வெயில் காலத்தில் இதுபோன்ற நாய் தொல்லைகள் அதிகரிப்பது என்பது தொடர் செயலாக இருந்து வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் இதுபோன்ற தெரு நாய்களைப் பிடிக்க உத்தரவிடவேண்டும். எனவும் இல்லாவிட்டால் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை உருவாகும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.