மடத்துக்குளம் குங்குமவள்ளி கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர் பட்டது
மடத்துக்குளம் குங்குமவள்ளி கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர் பட்டது;
மடத்துக்குளம் சோழமாதேவி குங்குமவள்ளி கோவிலில் சிவலிங்கம் மீது சூரியஒளிகதிரில் மின்னும் சுவாமி
மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் குங்குமவள்ளி உடனுறை குலசேகர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவன் ஆயிரம் ஆண்டு மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். கோவிலில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்து செல்வர். பொது ஊரடங்கு காரணமாக கோவிலில் சிறப்பு பூஜைகள்மட்டும் நடந்து வருகிறது.
கோவிலில் ஆண்டுதோறும் குறிப்பிட்டசில நாட்களில் சூரிய உதய நேரத்தில், சூரியன் ஒளிக்கதிர் நேராக கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் அதிசயம் நடக்கிறது. அதேபோல் இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது, சூரிய ஒளி நேராக கோவிலில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழுந்தது. இதையடுத்த கோவிலின் அரச்சகர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் இவற்றை தரிசனம் செய்தனர்.