மடத்துக்குளம் தொகுதி ஊராட்சிகளில் கொரோனா வார்டுகள் அமைப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி ஊராட்சிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக, வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.;
திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
அவ்வகையில், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிப்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மேலும் பல்வேறு ஊராட்சிகளில், கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மடத்துக்குளம் தொகுதியில் கொரோனா தடுப்பு சிகிச்சை மையங்களுக்கு தேவையான ஆக்சிஜன் வசதி, கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்; எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தங்கு தடையின்றி தடுப்பூசி வழங்க வேண்டும் என, மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏ மகேந்திரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.