மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அவரப்பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது தொழிலாளி. தனது மனைவி, மகளுடன் வசித்தார். அந்த பெண்ணும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் வீட்டில் தனியாக அவரது 12 வயது மகள் இருந்துள்ளாள்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதை தாயாரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக தனது மகளை மிரட்டி அந்த தொழிலாளி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத சிறுமி தனது தாயாரிடம் விவரத்தை கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பல்லடம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். ‘போக்சோ’ பிரிவின் கீழ் தொழிலாளி மீது வழக்குப் பதிவு செய்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 28 ஆண்டு சிறை தண்டனை
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). பெயிண்டராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 10 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் ‘போக்சோ’ பிரிவின் கீழ் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம், அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், இந்த தண்டனையை சதீஷ் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
16 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு 25 ஆண்டு சிறை
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிபி (வயது 23). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் தன்னுடன் வேலை செய்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் ‘போக்சோ’ பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ‘போக்சோ’ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், திருமணம் செய்வதாக கடத்திய குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம், இதை சிபி, ஏக காலத்தில் அனுபவிக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும் நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.