திருப்பூரில் பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடியா? - புகாா் சொல்ல தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசு விநியோகிப்பதில் குளறுபடி இருந்தால் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
Tirupur News,Tirupur News Today -திருப்பூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசு விநியோகிப்பதில் குளறுபடிகள் இருந்தால் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழு நீள கரும்பு அடங்கிய தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் வழங்க முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் அவா்களது இல்லங்களுக்கே சென்று ஜனவரி 9 -ம் தேதி வரை சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளா்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும்.
அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் குடும்ப அட்டைக்குரிய நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
அதே வேளையில், டோக்கன் பெறுவதற்காக குடும்ப அட்டைதாரா்கள் யாரும் நியாய விலைக்கடைக்கு செல்ல வேண்டாம். இதுதொடா்பாக புகாா் ஏதேனும் இருப்பின் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 0421-2218455, 1077 என்ற எண்ணிலும், கட்டணமில்லா தொலைபேசி 1967, 1800-425-5901 ஆகிய எண்களிலும் புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.