திருப்பூர் அரசு மருத்துவமனையில் முக கவசம் அணிந்துவர ஒட்டப்பட்ட அறிவிப்பு
irupur News, tirupur News today- தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் முக கவசம் கட்டாயம் அணிந்து வருமாறு அறிவிப்பு ஒட்டப்பட்டது.;
irupur News, tirupur News today- திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒட்டப்பட்ட அறிவிப்பு.
irupur News, tirupur News today- தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் , செவிலியர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இன்று முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும், முக கவசம் அணியாமல் வர தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், ஒரே நாளில் 2,994 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில், 777 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில், எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
திருப்பூர் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகள், சினிமா தியேட்டர்கள், பூங்கா, வணிக வளாகம், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் என, மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் முக கவசம் என்பதை கட்டாயப்படுத்துவது மிக முக்கியம். இன்னும் பன்மடங்கு தொற்று அதிகரித்த பிறகு, எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில், அதற்குள் பல ஆயிரங்களை தொற்று எண்ணிக்கை கடந்துவிடும் ஆபத்து உள்ளது.
தற்போது கோடை காலமாக இருப்பதால், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலானவர்கள், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். இருப்பினும் காலை, மாலை, இரவு நேரங்களில் வழக்கமாக மக்கள் கூட்டம் பொது இடங்களில் காணப்படுகிறது.
கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க, முக கவசம் அணிவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டமாக, நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, இடைவெளியை பின்பற்றுவது முக்கியம். மீண்டும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.விழிப்புணர்வுடன் இருந்தால், தொற்றை கட்டாயம் வராமல் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் முடியும். அரசு உத்தரவு வரும்வரை காத்திருக்காமல், பொதுமக்களே முன்வந்து எச்சரிக்கை நடவடிக்கைகளில் அக்கறை காட்டி பின்பற்ற வேண்டும்.