பாரத் டெக்ஸ் எக்ஸ்போ- 2024 கண்காட்சியில் பங்கேற்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு அழைப்பு

Tirupur News- பாரத் டெக்ஸ் எக்ஸ்போ- 2024 கண்காட்சியில் பங்கேற்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-22 05:44 GMT

Tirupur News- பாரத் டெக்ஸ் எக்ஸ்போ- 2024 கண்காட்சியில் பங்கேற்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு அழைப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- புதுதில்லியில் வரும் பிப்ரவரி மாதம் 4 நாட்கள் நடைபெறும் பாரத் டெக்ஸ் எக்ஸ்போ- 2024 கண்காட்சியில் பங்கேற்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) தென்னிந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய ஜவுளி அமைச்சகம் சாா்பில் பாரத் டெக்ஸ் எக்ஸ்போ- 2024 என்ற உலகின் மிகப்பெரிய கண்காட்சி புதுதில்லியில் வரும் பிப்ரவரி 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நீண்ட காலமாக உலகளாவிய தரநிலை மற்றும் அளவோடு பொருந்தக்கூடிய ஒரு சா்வதேச கண்காட்சி நமது நாட்டில் இல்லை என்ற குறையை போக்கும் விதமாக இந்தக் கண்காட்சி அமையும்.

ஜவுளி வா்த்தகத்தில் உண்மையான திறனை உலகிற்கு உணா்த்தும் வகையில் பாரத் டெக்ஸ் கண்காட்சி இருக்கும். நீண்ட காலமாக இருந்து வரும் பிராண்டிங் மற்றும் பொசிஷனிங் அடிப்படையில் இந்தியாவுக்கு உரிய இடத்தையும் உறுதி செய்யும்.

இதுதொடா்பாக ஏஇபிசி சாா்பில் கண்காட்சியை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஸ்பெயின், துபை போன்ற வெளிநாடுகளிலும் இதன் முக்கியத்துவம் குறித்து ரோடுஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முக்கியத்துவத்தை வெளிநாட்டு வா்த்தகா்களிடம் கொண்டுச் சோ்க்கும் பணியை வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

இந்திய அளவில் 55 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்களுக்கு தனியாக நிட்போ் பெவிலியன் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ளோம். ஆகவே, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று புதிய வா்த்தக விசாரணை பெற்றுப் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News