அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு

Tirupur News. Tirupur News Today- திருப்பூா், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-05-26 12:02 GMT

Tirupur News. Tirupur News Today- உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூா், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்டத்தில், திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதில், பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர இணையதளம் மூலம் அல்லது தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று உதவி சேவை மையத்தை அணுகலாம்.

அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படும். மேலும் குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட், தையல் இயந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

ஆகவே விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் ஜூன் 7 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55695, 94990-55700, 94990-55689 ஆகிய செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சூழ்நிலை, வறுமை, பொருளாதாரம், உடல்நிலை போன்ற பல காரணங்களால் பள்ளி மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தொழிற்கல்வி ஆகும். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக இந்த தொழிற்கல்வியில் சேர்ந்து பயன்பெறலாம்.

குடும்ப பொருளாதாரம் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயில்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை தர வயது உச்சவரம்பு இல்லை என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News