திருப்பூர் மாவட்டம்; அம்பேத்கர் விருது, அவ்வையார் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் அம்பேத்கர் விருது, அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.;
Tirupur News,Tirupur News Today- தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அம்பேத்கர் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது.
2023-24-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண்.113-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெறலாம். இந்த மாத இறுதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
அவ்வையாளர் விருது
பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவை புரிந்த பெண்கள் அவ்வையாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
சா்வதேச மகளிா் விழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-ம் ஆண்டுக்கானஅவ்வையாா் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்கப்படும்.
சமூக நலனை சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கைகள், சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு 2024-ம் ஆண்டுக்கான அவ்வையாா் விருது வழங்கப்படுகிறது.
எனவே விருது பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.