ஒருகால பூஜை கோவில்களில் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வலியுறுத்தல்
Tirupur News-ஒருகால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- ஒருகால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூரில் இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசு கூறியதாவது,
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் பணியாற்றும் சிவாச்சாரியாா்கள், பூசாரிகள் என அனைவருக்கும் தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகை வழங்கி வருகிறது.
ஒருகால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு இத்தொகை வழங்கப்படுவதில்லை. இவா்கள் மாதந்தோறும் கிடைக்கும் ஊக்கத் தொகை மற்றும் பக்தா்கள் வழங்கும் காணிக்கைகளை நம்பியே குடும்பத்தை நடத்தி வருகின்றனா். எனவே, ஒருகால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றாா்.