திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 900 கோடி கடன் வழங்கியதாக தகவல்

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2023-24-ம் ஆண்டில் 88,898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-11-04 14:43 GMT

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 900 கோடி கடன் வழங்கியதாக தகவல் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2023-24-ம் ஆண்டில் 88,898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், உரிய தவணைத் தேதியில் பயிா்க் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் வட்டியை செலுத்தத் தேவையில்லை. அதன்படி, 2023-24- ம் ஆண்டில் நவம்பா் 2-ம் தேதி வரை 21,395 விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ.243.09 கோடி, கால்நடை பராமரிப்புக் கடனாக 3,554 பேருக்கு ரூ.26.25 கோடி என மொத்தம் 24, 949 விவசாயிகளுக்கு ரூ.269.34 கோடி வட்டியில்லாத பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, 58, 240 பேருக்கு நகைக் கடன்களாக ரூ.492 கோடியும், 375 பேருக்கு மத்திய கால கடன்களாக ரூ.3.78 கோடியும், 129 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.84.95 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 377 பேருக்கு ரூ.2.72 கோடியும், டாம்கோ மூலம் 98 பேருக்கு ரூ.78 கோடியும், 848 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.24 கோடியும், 155 பேருக்கு வீட்டுக் கடனாக ரூ.7.78 கோடியும், 1,355 பேருக்கு சிறு கடன்களாக ரூ.4.44 கோடியும், 2, 372 பேருக்கு இதர கடன்களாக ரூ.68.24 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 88,898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23- ம் ஆண்டைக் காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News