ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள் நிம்மதி

Tirupur News,Tirupur News Today- கடந்த பிப்ரவரி மாதம் முதல், நூல் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதமும், கடந்த மாத விலை நிலவரமே நீடிக்கும் என நூற்பாலைகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-06-01 07:02 GMT

Tirupur News,Tirupur News Today- நடப்பு மாதம் ஜூனில், நூல் விலையில் மாற்றமில்லை என, நூற்பாலைகள் அறிவித்துள்ளன. (கோப்பு படம்) 

Tirupur News,Tirupur News Today- பனியன் உற்பத்தி தொழில் நகரமான திருப்பூரில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து, ஆடைகளை தயாரிக்கின்றனர். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே, நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது.

தற்போது நடப்பு மாதத்திற்கான(ஜூன்) நூல் விலை ஆனது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளன.

இதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News